இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு?

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 'இந்தியா' எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 'இந்தியா' எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் இரு அவைகளும் முடங்கியுள்ளன. 

முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் ஒருபுறம் நடக்க, மறுபுறம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் 'இந்தியா' கூட்டணி எதிர்க்கட்சிகள் கூடி விவாதித்தன. 

இதில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி முழுமையான விளக்கம் தரும் வரை போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

அதுபோல மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் மக்களவையில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டுள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது கடினமாகவேப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT