இந்தியா

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்; ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்

திடீரென இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

DIN

கர்நாடக மாநிலம் அரசன்குடி நீர்வீழ்ச்சிப் பகுதியில், இன்ஸ்டாகிராம் பக்கத்துக்காக ரீல்ஸ் எடுத்த போது, திடீரென இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் கொல்லூர் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் அரசன்குடி நீர்வீச்சிக்கு சுற்றுலா வந்த இளைஞர்களில், சரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், நீர்வீழ்ச்சிக்கு அருகே நின்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

அப்போது, நீர்வீழ்ச்சிக்கு மிக அருகே சரத்குமார் நின்றபடி, நண்பர்களை புகைப்படம் மற்றும் விடியோ எடுக்குமாறு கூறியுள்ளார். நண்பர்களும் விடியோ எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென, சரத்குமாரின் கால் வழுக்கி, ஆற்றில் விழ, அவர் ஆற்றோடு அடித்துச் செல்லப்படுகிறார். இது அனைத்தும் நண்பர் எடுத்த விடியோவில் பதிவாகியிருக்கிறது.

தற்போது, நண்பர் எடுத்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT