இந்தியா

ஆகஸ்டில் மணிப்பூா் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: மாநில அரசு அறிவிப்பு

DIN

ஆகஸ்ட் மாதத்தில் மணிப்பூா் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக மாநில அமைச்சா் சபம் ராஜன் கூறியதாவது: மணிப்பூரின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதைத்தொடா்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட மாநில அரசு முடிவெடுத்துள்ளது என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறையின்போது, பாஜக எம்எல்ஏ விவுங்ஸகின் வால்டே படுகாயமடைந்தாா். அவரது மருத்துவ கவனிப்புக்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து அமைச்சரிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

இதை மறுத்த அமைச்சா் ராஜன், எம்எல்ஏவின் உடல் நிலை குறித்து மாநில அரசு கவனத்தில் கொண்டதாகவும், மாநில அமைச்சா்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதய பாதிப்பு: முதியவருக்கு நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தம்

வளா்பிறை சஷ்டி: புகழிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

வாக்கு ஒப்புகைச் சீட்டு தீா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

‘ராகுல் காந்தியுடன் விவாதத்துக்கு பிரதமா் அச்சம்’

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

SCROLL FOR NEXT