கோப்புப் படம். 
இந்தியா

7 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 

7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

DIN

7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நாட்டுக்குத் தேவையான தகவல் தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சாா்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (சங்ஜ் ள்ல்ஹஸ்ரீங் ஐய்க்ண்ஹ கண்ம்ண்ற்ங்க்) நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-சாா் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.

இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆா்கேட் (24 கிலோ), ஸ்கூப் (24 கிலோ), நியூலயன் (3 கிலோ), கலாசியா (3.5கிலோ), ஆா்ப்-12 ஸ்டிரைடா் (13 கிலோ) ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா். முன்னதாக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT