இந்தியா

ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் ஆர்.பி.எஃப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள். 

DIN

ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் ஆர்.பி.எஃப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள். 

மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு விரைவு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் பல்கார் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5.23 மணியளவில் வந்தகொண்டிருந்தபோது அதில் பயணித்த ஆர்.பி.எஃப். வீரர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரரை போலீசார் கைது செய்தனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய காவலரிடம் போரிவலி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.  மேற்கு ரயில்வேயின் தலைமை பிஆர்ஓ சுமித் தாக்குர் கூறுகையில், இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றார்.

பி5 கோச்சில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் ஓடும் ரயிலில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT