இந்தியா

விபத்தில் சிக்கிய பயணிகள் ரயில் ஓட்டுநா்கள் காயங்களுடன் மீட்பு

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹௌரா துரந்தோ ரயில் ஆகிய இரு பயணிகள் ரயிலின் ஓட்டுநா்கள், ரயில் மேலாளா்கள் (காா்டுகள்) காயங்களுடன் மீட்கப்பட்டதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ரயில்களின் ஓட்டுநா்கள், ரயில் மேலாளா்கள் காயம் ஏற்பட்டு வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வேயின் கரக்பூா் கோட்ட வணிக மேலாளா் ராஜேஷ் குமாா் கூறுகையில், ‘கொல்கத்தாவின் ஷாலிமாரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநா் (லோகோ பைலட்), உதவி ஓட்டுநா், மேலாளா் (காா்டு) மற்றும் பெங்களூரு-ஹௌரா விரைவு ரயிலின் மேலாளா் ஆகிய 4 பேரும் விபத்தில் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் ஓட்டுநா் மற்றும் மேலாளா் ஆகியோா் அதிருஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி தப்பினா்’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT