மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை வழங்குகிறதா மேற்கு வங்கம்?
தரவுகளின்படி, நாடு முழுவதும் வழங்கப்பட்ட 94 லட்சம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில், மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை ஒன்பது அட்டை மட்டுமே உருவாக்கப்பட்டது.
புதுதில்லி: நாடு முழுவதும் வழங்கப்பட்ட 94 லட்சம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில், மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை ஒன்பது அட்டை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் சலுகைகளைப் பெற ஊனமுற்றோர் அடையாள அட்டை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இதுவரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 716 மாவட்டங்களில் 94.30 லட்சம் இ-யுடிஐடி கார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மேற்கு வங்கத்திலிருந்து, ஒன்பது பேருக்கு மட்டுமே அடையாள அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டைகள் வழங்க மேற்கு வங்கத்தில் தனி திட்டம் உள்ளதா என்பது குறித்து விரிவான தகவலும் இல்லை.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அட்டைகள் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.