முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் சாலை விபத்து: காவலர் உள்பட 4 பேர் பலி!

ராஜஸ்தானின், சிக்காரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் உள்பட நால்வர் பலியாகினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:04 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின், சிக்காரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் உள்பட நால்வர் பலியாகினர். 

இன்று காலை 5 மணிக்கு ஃபதேபூர் சதர் காவல் நிலைய பகுதிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இறந்தவர்கள் காவலர் ரெவந்த்ராம், தேஜரம், ஷாருக் மற்றும் ரியாஸ் ஆவார். இவர்கள் அனைவரும் ஜோத்பூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →