இந்தியா

அடுத்த இரண்டு நாள்களில் 4 மாநிலங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் உள்துறை அமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் 4 மாநிலங்களில் பொதுக் கூட்டம்.

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் 4 மாநிலங்களில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக வெளியான தகவலில் கூறியிருப்பதாவது: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் (ஜூன் 11) பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜகவின் அரசியல் திட்டங்கள் குறித்தும், அரசியல் கூட்டணி குறித்தும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் நாளை (ஜூன் 10) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். ஆந்திரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக தமிழகத்தின் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

SCROLL FOR NEXT