இந்தியா

மாநிலங்களுக்கு வரிப் பகிர்வின் 3வது தவணையாக ரூ.1.18 லட்சம் கோடி நிதி விடுவிப்பு!

மாநிலங்களுக்கு வரி பகிர்வின் மூன்றாவது தவணையாக ஜூன் மாதத்தில் ரூ.1.18 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: மாநிலங்களுக்கு வரி பகிர்வின் மூன்றாவது தவணையாக ஜூன் மாதத்தில் ரூ.1.18 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் நலன் தொடர்பான செலவுகளுக்கு நிதியளிக்கவும், முன்னுரிமை திட்டங்களுக்கான வளங்களை கிடைக்க செய்யவும் மாநிலங்களுக்கு 2023ஆம் ஜூன் மாதத்தில் செலுத்த வேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக ஒரு அட்வான்ஸ் தவணை வழங்கப்படுகிறது.

வழக்கமான மாதாந்திர பகிர்வு ரூ.59,140 கோடிக்கு பதிலாக 2023 ஜூன் 12ஆம் தேதியன்று மாநில அரசுகளுக்கு வரி பகிர்வின் மூன்றாவது தவணை ரூ.1,18,280 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தற்போது மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம், ஒரு நிதியாண்டில் 14 தவணைகளாக, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT