இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இருதரப்பினரிடையே மோதல்: 3 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். 

சம்பா மாவட்டத்தின் ராம்கர் செக்டார் அருகில் இன்று அதிகாலை 4 மணியளவில் இருதரப்பினர் இடையே நிகழ்ந்த மோதலில், துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் பாஞ்சாப்பை சேர்ந்து உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். 

இதுதொடர்பாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பெனம் டோஷ், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

துப்பாக்கிச் சூட்டிடுல் உள்ளூரைச் சேர்ந்த சுனில் குமார்(25), சுஷில் குமார் (23), பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்த சன்னி குமார்(30) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாபின் தரன் தரானில் வசிக்கும் சதிண்டர்பால் சிங் மற்றும் ஜக்பிரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

SCROLL FOR NEXT