இந்தியா

மும்பை-புணே விரைவுச் சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

மும்பை-புணே விரைவுச் சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

DIN

மும்பை-புணே விரைவுச் சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மும்பை-புணே விரைவுச் சாலையில் ரசாயனம் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி, கண்டலா வனப்பகுதியில் உள்ள குனே பாலத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரி தீப்பிடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. 

ரசாயனம் கலந்த லாரி என்பதால் தீ பாலத்தின் அடியில் பரவத் தொடங்கியது. தீ பிழப்பானது பாலத்தின் கீழ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்தது. இந்நிலையில் 12 வயது சிறுவன் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

படிக்க: பிபர்ஜாய் புயல்: ராஜஸ்தானின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT