இந்தியா

வந்தே பாரத் ரயில் மீது 7வது முறையாக கல்வீச்சு!

உத்தரப் பிரதேசத்தில் தில்லி - டேராடூன் இடையிலான வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தில் தில்லி - டேராடூன் இடையிலான வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் 7வது முறையாக கல்வீச்சு சம்பவத்தால், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி பழுதாகியுள்ளது.

தில்லி - உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் இடையிலான வந்தே பாரத் ரயில் தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. உத்தரப் பிரதேசம் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது முசாஃபர்நகர் பகுதியில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் ரயிலின் இ-1 பெட்டியிலிருந்த கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு இதில் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

SCROLL FOR NEXT