இந்தியா

ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி; ஜில் பைடனுக்கு வைரம்: மோடியின் பரிசு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டியும், அவரது மனைவி ஜில் பைடனுக்கு வைரக் கல்லையும் பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்துள்ளார்.

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டியும், அவரது மனைவி ஜில் பைடனுக்கு வைரக் கல்லையும் பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்துள்ளார்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்கு புதன்கிழமை சென்ற பிரதமா் மோடி, வரும் 23-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். முதல் நாளான புதன்கிழமை அமெரிக்காவின் பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இரண்டாவது நாளான இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகைக்கு வருகைதந்த மோடியை ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.

இந்த சந்திப்பின்போது ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி, சந்தனப் பெட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். மைசூரிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தனக் கட்டையை கொண்டு ஜெய்ப்பூரில் வடிவமைக்கப்பட்ட பெட்டியில், விநாயகர் சிலை உள்ளிட்ட பொருள்களை இடம்பெற்றிருந்தன.

அதேபோல், ஜில் பைடனுக்கு 7.5 கேரட் வைரக் கல்லை மோடி பரிசாக அளித்தார். இந்த வைரக்கல்லானது சூரிய சக்தி மற்றும் காற்றாலையால் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பிரதமர் மோடிக்கு 20-ஆம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட புத்தகத்தையும், பழமைவாய்ந்த அமெரிக்க புகைப்படக் கருவியையும் ஜோ பைடன் பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்றிரவு விருந்தளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT