இந்தியா

அசாமில் பெய்த கனமழைக்கு 5 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

DIN

அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலில், 

அசாமில் பெய்த கனமழைக்கு மொத்தம் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒருவர் பலியாகியுள்ளார். 

மேலும், பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், போங்கைகான், சிராங், டாராங், தாமாஜி, துப்ரி, திப்ருகர், கோலகத், ஹோஜாய், கம்ரூப், கோக்ராஜ்ஹார், லகிம்பூர், மஜூலி, நாகோன், நல்பாரி மற்றும் சோனிட்பூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பஜாலி மற்றும் தாராங்கில் பெரும்பாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு மாவட்டங்களிலும் 58 வருவாய் வட்டங்களில் சுமார் 1,350 கிராமங்கள் உள்ளன. அவற்றில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 

சுமார் 14,035 பேர் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 162 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 4,091 ஹெக்டர் நிலங்களுக்கு மேல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுதவிர பாலங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்துள்ளன. 

இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பிரம்மபுத்திரா, மனாஸ் மற்றும் புத்மாரி நதிகளில் அபாய அளவை விட  நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

4வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

SCROLL FOR NEXT