இந்தியா

பிரதமரை தனித்து தோற்கடிக்கும் திறன் இல்லாததால் ஆதரவு தேடும் காங்கிரஸ்: பாஜக

DIN

பிரதமர் நரேந்திர மோடியை வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் தனியாக எதிர்த்து நின்று தோற்கடிக்கும் திறன் இல்லாததால் காங்கிரஸ் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுத்து வருகிறாா். 

அதன் ஒரு பகுதியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் அவா் ஏற்பாடு செய்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனா். 

இந்த நிலையில், பிரதமர் மோடியை வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் தனியாக எதிர்த்து நின்று தோற்கடிக்கும் திறன் இல்லாததால் காங்கிரஸ் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக பாஜக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி கூறியதாவது: இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது ஜனநாயகப் படுகொலையை காண நேர்ந்த சில தலைவர்கள் தற்போது காங்கிரஸுடன் இணைந்து பாட்னாவில் கூடியுள்ளனர். இந்த கூட்டத்தின் மூலம் காங்கிரஸ் ஒன்றை தெளிவுப்படுத்துகிறது. அவர்களால் வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை தேர்தல் களத்தில் தனித்து சந்திக்க முடியாது என தெளிவுபடுத்துகிறது. காங்கிரஸால் பிரதமர் மோடியை தனித்து நின்று தோற்கடிக்க முடியாது என வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. அதன் காரணத்தினால் அவர்கள் அவசரநிலையின்போது சிறையில் வைக்கப்பட்டவர்களின் ஆதரவை நாடுகின்றனர். பிகாரின் கங்கை நதியின் மீது சரியாக பாலம் கட்ட முடியாத அம்மாநில முதல்வர் எப்படி ஜனநாயக பாலத்தினை அமைக்கப் போகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT