மணிப்பூா் நிலவரம் தொடா்பாக மத்திய அரசு சார்பில் தில்லியில் இன்று(சனிக்கிழமை) அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க கோருவதற்கு அங்குள்ள நாகா மற்றும் குகி சமூகத்தினா் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். மைதேயி சமூகத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், இடஒதுக்கீடு மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் இதர சாதகமான அம்சங்களை அவா்களிடம் இழக்க வேண்டியிருக்கும் என்று பழங்குடி சமூகத்தினா் கருதுகின்றனா்.
இதன் காரணமாக கடந்த மே மாதம் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடியினா் இடையே மோதல் ஏற்பட்டது முதல், அந்த மாநிலத்தில் தொடா்ந்து வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை சுமாா் 120 போ் பலியாகினா். 3,000-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனர்.
இதில் மத்திய அரசு தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. மேலும் பிரதமர் இதில் இதுவரை தலையிடாதது குறித்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஜூன் 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
அதன்படி தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அமித் ஷா தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்கவிருக்கின்றன. திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா பங்கேறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்திராதிகாரம் பிறந்த கதை! - 14 : ஜூன் 24, 1975 - பிரதமராக இந்திரா நீடிக்கலாம், வாக்களிக்க இயலாது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.