முகப்பு
இந்தியா

ஜூலை 4ல் ஹைதராபாத் செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு!

சுதந்திர போராளி அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூலை 4-ம் தேதி ஹைதராபாத்திற்கு வருகிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
கோப்புப்படம்
பகிர்:

சுதந்திர போராளி அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூலை 4-ம் தேதி ஹைதராபாத்திற்கு வருகிறார். 

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  

அவர் நடத்திய ஆலோசனையில் சாலை பழுது, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். 

அல்லூரி சீதாராம ராஜு பழங்குடி சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர். 1922ல் தொடங்கப்பட்ட ராம்பா கலகம் எனப்படும் போராட்டத்தை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.