முகப்பு
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டால் விடுதி அறை வாடகை அதிகரிப்பு!

நடப்பாண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
கோப்புப் படம்
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி, விடுதி அறை மற்றும் நட்சத்திர விடுதிகளின் அறை வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகியுள்ளன. இந்த நிலையில், ஆமதாபாத்திலுள்ள விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் அறை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

ஐடிசி விடுதியில் அறை வாடகை ரூ.71,999 மற்றும் ரெனாய்ஸ்ஸென்ஸ் போன்ற நட்சத்திர விடுதிகளில் ரூ.90,679 வரை அறை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நட்சத்திர விடுதிகளில் போட்டி நடைபெறும் தேதியில் மோரியாட், ஹயாத் போன்ற நட்சத்திர ஹோட்டல் விடுதி அறைகளின் முன்பதிவு நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →