ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி வருகிற மார்ச் 8 ஆம் தேதி இந்தியா வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், மார்ச் 8 ஆம் தேதி ஆமதாபாத் வரும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து ஹோலி பண்டிகையில் கலந்துகொள்கிறார். பின்னர் மார்ச் 9ல் நடைபெறவுள்ள இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை இரு தலைவா்களும் பாா்வையிடுகின்றனா்.
அதன்பின்னர் தில்லி செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வா்த்தகம், முதலீடு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளின் பிரதமா்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசுகிறார் ஆல்பனேசி.
இந்த பயணம் குறித்து ஆல்பனேசி, 'பிரதமராக இது எனது முதல் இந்தியப் பயணம். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வலுவான பிணைப்பை வலுப்படுத்த எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்தியாவுடனான எங்கள் உறவு வலுவானது, ஆனால் அது மேலும் வலுப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமராக ஆல்பனேசி கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அவரது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகத்தை விரிவுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் குழு இன்று தமிழகம் வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.