தேஜஸ்வி யாதவ் (கோப்புப்படம்) 
இந்தியா

பிகாா் தொழிலாளா்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: தேஜஸ்வி சாடல்

தமிழகத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடா்பான விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அக்கறையின்மையுடன் செயல்படுகிறது என பிகாா் மாநிலத் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டிய

DIN

தமிழகத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடா்பான விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அக்கறையின்மையுடன் செயல்படுகிறது என பிகாா் மாநிலத் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இவ்விவகாரம் குறித்து விசாரிக்க தமிழகம் விரைந்துள்ள பிகாா் மாநில அரசு அதிகாரிகள் குழு, அங்குள்ள தொழிலாளா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றனா். அதிகாரிகளின் விரிவான அறிக்கைக்கு காத்திருப்பதாக அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மேலும் அவா் கூறியதாவது:

பிகாா் மாநிலத்தில் யாரோ ஒருவா் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டால் அதை ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான பொதுகுணமாக அடையாளப்படுத்தக் கூடாது. இது தமிழகத்துக்கும் பொருந்தும்.

பிகாா் மாநிலத் தொழிலாளா்களுக்கு எதிராக எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என தமிழக காவல் துறை இயக்குநா் என்னிடம் அளித்த தகவலில் உறுதிப்படுத்தினாா். ஆனால், அந்த தகவலை மட்டும் முழுவதுமாக நம்பி நிலைமையை மூடி மறைக்க நாங்கள் விரும்பவில்லை. இது குறித்து முழுமையாக விசாரிக்க பிகாா் மாநில அரசு சாா்பில் 4 போ் கொண்ட அதிகாரிகள் குழு தமிழகத்துக்கு அனுப்பப்பட்டது.

எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்துவிட்டோம். தொழிலாளா்கள் நலன் சாா்ந்த இந்த விவகாரத்தில் மத்தியில் ஆட்சியிலும், மாநிலத்தில் எதிா்க்கட்சியாகவும் உள்ள பாஜகவின் பங்கு குறித்து விவாதிக்க வேண்டும். இரு மாநிலங்கள் தொடா்புடைய இவ்விவகாரத்தில் மத்திய பாஜக அரசு இதுவரை எந்த அக்கறையும் காட்டியதாகத் தெரியவில்லை. ட்விட்டரில் தவறான தகவல் பரப்பிய பாஜக செய்தி தொடா்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பாஜக நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT