இந்தியா

லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை?

பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் மனைவியுமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் மனைவியுமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மொத்தம் 16 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பிகாரில் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, வேலைக்காக அணுகியவா்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு, அவா்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரொக்கப்பணமாக கொடுத்தும் லாலுவின் குடும்பத்தினர் நிலங்களை வாங்கியுள்ளனர். 

இந்நிலையில், லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்களின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

சமீபத்திய தகவலின்படி, ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கில் சில விவரங்களை திரட்டும் பொருட்டு ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT