இந்தியா

மும்பையில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்பு

மும்பை கடற்கரை அருகே ரோந்து பணியின்போது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

DIN

மும்பை கடற்கரை அருகே ரோந்து பணியின்போது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மும்பை கடற்கரைக்கு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது.  

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பணியாளர்களும் உடனடியாக கடற்படை ரோந்துக் கப்பல் மூலம் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கடற்படை தகவல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

345 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

SCROLL FOR NEXT