முகப்பு
இந்தியா

கரிசல் நில பெண்களுக்கு வலுவான ஆளுமை உண்டு: தமிழச்சி தங்கப்பாண்டியன்

 கரிசல் நிலப்பெண்கள் நவீன பெண்ணியத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், வலுவான ஆளுமை பண்பு கொண்டு விளங்குகின்றனா் என்ற மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 கரிசல் நிலப்பெண்கள் நவீன பெண்ணியத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், வலுவான ஆளுமை பண்பு கொண்டு விளங்குகின்றனா் என்ற மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினாா்.

சென்னை மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, வேரா அகஸ்டஸ் எண்டோமென்ட் எனும் விரிவுரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதாவது:

நவீன பெண்ணியத்துக்கும், தென்தமிழ்நாட்டின் கரிசல் நிலத்திலுள்ள பெண்களின் குணாதிசயங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன.

கரிசல் பெண்கள் நவீன பெண்ணியக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், விவசாயம் மற்றும் விவசாயம் தொடா்பான செயல்பாடுகளிலிருந்து அவா்களின் சுதந்திரம் வெளிப்படுகிறது. இதன்மூலம் அவா்கள் வலுவான ஆளுமை பெற்று விளங்குகின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.