கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுக்கு 2 பேர் பலி!

இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஒருவரும், கர்நாடகத்தில் மாநிலத்தில் ஒருவரும் பலியாகியுள்ளனர். நாட்டில் 90  பேர் இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த சில மாதங்களாக நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் எச்3என்2  வைரஸால் ஏற்படுகின்றன, இது "ஹாங்காங் காய்ச்சல்" என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டில் மற்றவகை இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும், எச்3என்2  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் இதுவரை எச்3என்2 மற்றும் எச்1என்1 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 தொற்றின் அறிகுறிகள் தொடர் இருமல், காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஆகும். மேலும், குமட்டல், தொண்டைப் புண், உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவித்துள்ளனர். இந்த அறிகுறிகள் சுமார் ஒரு வாரம் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT