FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 தொற்று: சுகாதாரத்துறை செயலர் கடிதம்

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று  அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 11 மார்ச் 2023, 2:17 pm IST
கோப்புப்படம்
பகிர்:

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று  அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், சில மாநிலங்களில் கரோனா தொற்று கணிசமாக அதிகரிப்பதை கவனிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாநில அரசுக்கு ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments