இந்தியா

பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலை: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!

கர்நாடகத்தில் பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 118 கிமீ நீளத்திற்கு ரூ.8,480 கோடி செலவில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

DIN

கர்நாடகத்தில் பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 118 கிமீ நீளத்திற்கு ரூ.8,480 கோடி செலவில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மைசூரு-குஷால்நகா் இடையிலான 4 வழி நெடுஞ்சாலைக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். 92 கி.மீ. நீளமுள்ள இத்திட்டம் ரூ.4130 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், பாஜக தேசியத் தலைவா்கள் கா்நாடகத்தில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்நிலையில், கர்நாடகத்தில் நலத்திட்ட உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 118 கிமீ நீளத்திற்கு ரூ.8,480 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையை மோடி தொடக்கி வைத்தார். 

விரைவுச்சாலை மூலம் பெங்களூரு-மைசூரு இடையிலான பயணநேரம் 3 மணியில் இருந்து 1.15 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது.

இதேபோன்று மைசூரு-குஷால்நகா் இடையிலான 4 வழி நெடுஞ்சாலைக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.. 92 கி.மீ. நீளமுள்ள இத்திட்டம் ரூ.4130 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டவுடன் பெங்களூருக்கும் குஷால்நகருக்கும் இடையிலான பயணநேரம் 5 மணியில் இருந்து 2.5 மணி நேரமாக குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT