இந்தியா

கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, மேலும் 34 நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

DIN

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கூடுதலாக 34 நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த நகரங்கள் அமைந்துள்ளன.

முன்னதாக 331 நகரங்களில் 5ஜி சேவை செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் கூடுதலாக 34 நகரங்களுக்கு 5ஜி சேவையை விரிவுபடுத்தப்படுத்துவதால் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சுற்றுலா, உற்பத்தி, கல்வி, வணிகம், விவசாயம், சுகாதாரம், ஆட்டோமேஷன், ஐடி ஆகிய துறைகள் புதிய வளர்ச்சியை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2023க்குள், ஜியோ 5ஜி சேவை நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் செயல்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT