பாட்னாவில் பரவும் பன்றிக் காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா: மக்கள் அச்சம்!
பாட்னாவின் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பும், இரண்டு பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலும் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாட்னாவின் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பும், இரண்டு பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலும் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாட்னாவில் சிவில் சர்ஜன் ஷரவன் குமார் கூறுகையில்,
சப்ஜிபாக் பகுதியைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை மற்றும் சம்பட்சாக்கில் ஒருவருக்கு இன்ஃப்ளூயன்சா(எச்3என்2) பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் இரண்டு பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், பாட்னாவில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பல்வேறு தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 20 படுக்கைகளும், பாட்னா எய்ம்ஸில் 30 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், நாலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சதர் மருத்துவமனை ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.