இந்தியா

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை தேவை

DIN


ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம் சட்டவிரோதம் என நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், ஓ.டி.டி. நிறுவனங்களும் ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது.

இணையதளங்கள் மட்டுமின்றி காட்சி, அச்சு ஊடகங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியாவதால் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் சமூக, நிதி பிரச்னைகளையும் ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT