இந்தியா

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து ஏற்பட்டது. 

DIN

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து ஏற்பட்டது. 

கர்நாடகத்தில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கோலார் மாவட்டத்தில் முலுபாகிலு தொகுதிக்கு பிரசாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்றபோது திடீரென கழுகு மோதி ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது. 

இதையடுத்து பாதுகாப்பு கருதி அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. 

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT