முகப்பு
இந்தியா

காங்கிரஸுக்கு ஆதரவாக களமிறங்கிய சிவ ராஜ்குமார்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவ ராஜ்குமார் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:54 PM
பகிர்:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவ ராஜ்குமார் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் மேற்கொண்டு வரும் சூழலில், காங்கிரஸுக்கு ஆதரவாக சிவ ராஜ்குமார் களமிறங்கியுள்ளார்.

பிரசாரத்தில் பேசிய சிவ ராஜ்குமார், “ராகுல் காந்தியின் ரசிகராக இங்கு வந்துள்ளேன். நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்ராவை அவர் மேற்கொண்டார். இந்த யாத்திரையின் மூலம் நான் ஈர்க்கப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

சில நாள்களுக்கு முன்னதாக சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா, காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →