கோப்புப்படம் 
இந்தியா

இனி தேவையற்ற அழைப்புகளின் தொந்தரவு இருக்காது!

தெரியாத எண்களில் இருந்து வரும் தேவையற்ற(sapm) அழைப்புகள் மூலம் நீங்கள் சோர்வாக உணரும் பட்சத்தில் இனி அந்த தொந்தரவு இருக்காது.

DIN

தெரியாத எண்களில் இருந்து வரும் தேவையற்ற(sapm) அழைப்புகளின் மூலம் நீங்கள் சோர்வாக உணரும் பட்சத்தில் இனி அந்த தொந்தரவு இருக்காது.

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), மே 1, 2023 முதல் இந்த தேவையற்ற அழைப்புகளை நிறுத்த புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது.

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த புதிய விதிகள் மூலம் தங்கள் அழைப்பு மற்றும் செய்தி சேவைகளில் செயற்கை நுண்ணறிவு(AI ) ஸ்பேம் வடிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி மற்றும் தொந்தரவில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய் இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

டிராய் வெளியிட்ட புதிய விதிகளின்படி, ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் அழைப்பு மற்றும் செய்தி சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்பேம் வடிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். 

இந்த வடிப்பான்கள் போலி மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் செய்திகளை அடையாளம் கண்டு தடுக்கும். இது பெரும்பாலும் மோசடி செய்து பணத்தை ஏமாறும் நுகர்வோரை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. 

நேற்று வெளிவந்த இந்த புதுவிதிகளை ஏர்டெல் நிறுவனம் பின்பற்றுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் விரைவில் ஸ்பேம் வடிகட்டிகளைப் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT