இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் 13,000 மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

DIN

போபால்: கிராமப்புறங்களில் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும், அதிகாரிகளின் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச ஸ்வஷாசி சிகித்சக் மகாசங்கத்தின் குடை அமைப்பின் கீழ் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 13,000 மருத்துவர்கள் பங்கேற்கின்றனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதமும் இதேபோன்ற போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் வெளிநோயாளிகள் சேவைகள் மற்றும் பிற அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கோட்ட ஆணையர்களுடன் வேலைநிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாநிலத்தில் மருத்துவ வசதிகள் சீராக செயல்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT