இந்தியா

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்த பஜ்ரங்தளம்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எரித்து பஜ்ரங்தளம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எரித்து பஜ்ரங்தளம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், பஜ்ரங்தளம் மற்றும் பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங்தளம் அமைப்பினர், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT