தில்லிப் பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கியுள்ள முதுநிலை மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார்.
வெள்ளை டி-சர்ட் அணிந்து மாணவர்களுடன் அவர் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்களது கல்வியில் அடுத்து என்ன செய்யலாம் என திட்டம் வைத்துள்ளார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த மாதம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடையேயும், ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையேயும் முகர்ஜி நகர் பகுதியில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
முகர்ஜி நகர் பகுதியில் சாலையோரத்தில் நாற்காலியில் அமர்ந்து மாணவர்களிடம் ராகுல் காந்தி, அவர்களது அனுபவம் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.