இந்தியா

காங்கிரஸ் தலைவருக்கான கொலை மிரட்டல் ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்படும்: பசவராஜ் பொம்மை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

DIN

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: எனக்கு ஆடியோ குறித்து எதுவும் தெரியாது. ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்படும். நாங்கள் இந்த விஷயத்தை மிகுந்த கவனம் கொடுத்து விசாரிக்க உள்ளோம் என்றார்.

கர்நாடகத்தில் கலபுரகி மாவட்டத்திலுள்ள சித்தார்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், காங்கிரஸ் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனேவின் மனைவி மற்றும் அவரது மொத்தக் குடும்பத்தையும் அழித்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொலை மிரட்டல் தொடர்பான ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் கூறியதாவது: நான் மிரட்டியதாக கூறப்படுவது அனைத்தும் பொய். அவர்கள் போலியான ஆடியோவை வெளியிடுட்டுள்ளார்கள். தேர்தல் தோல்வி பயத்தினால் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT