இந்தியாவில் இன்று ஒரு நாளில் புதிதாக 2,380 கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,041-லிருந்து 27,212 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்த்து மொத்தமாக 4.49 கோடி பேர் (4,49,69,630) கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,31,659 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 27,212 ஆக உள்ளது. இது மொத்த தொற்றில் 0.06 சதவிகிதம் ஆகும். கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 98.75 சதவிகிதமாக உள்ளது. இதுவரை 220.66 கோடி கரோனா தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.