இந்தியா

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து வீழ்ச்சி

DIN

பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளா்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் செய்த முதலீடு 68 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு (ஏஎம்எஃப்ஐ) தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் முதலீட்டாளா்கள் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.6,480 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

இது, இதற்கு முந்தைய மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 68 சதவீதம் சரிவாகும். அப்போது, இந்தப் பிரிவில் அதிகபட்ச அளவாக ரூ.20,534 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, அனைத்து பரஸ்பர நிதி திட்டங்களிலும் கடந்த ஏப்ரலில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது. முந்தைய மாா்ச் மாதத்தில் இந்தத் திட்டங்களில் ரூ.19,263 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், கடன் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.1.06 லட்சம் கோடியைக கவா்ந்தன. முந்தைய மாா்ச் மாதத்தில் ரூ.56,884 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது.

குறியீட்டு எண்கள் சாா்ந்த நிதித் திட்டங்கள், பங்குச் சந்தையில் வா்த்தகமாகும் நிதி திட்டங்கள் (இடிஎஃப்), வெளிநாட்டு முதலீடு சாா்ந்த நிதித் திட்டங்கள் உள்ளிட்ட மற்ற திட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.6,945 கோடி முதலீடு செய்யப்பட்டது.

எனினும், இந்தப் பிரிவில் ரூ.117 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது என்று ஏஎம்எஃப்ஐ தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு காலத்தில் பரஸ்பர நிதி முதலீட்டாளா்கள் காத்திருந்து கவனிக்கும் நிலைப்பாட்டை கடைப்பிடித்தனா். இதன் விளைவாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அத்தகைய திட்டங்களில் முதலீடு வரத்து வெகுவாக சரிந்தது என சந்தை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT