இந்தியா

பாலியல் புகாா்களை பதிவிட குழு இல்லை: விளையாட்டு அமைச்சகத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்திய மல்யுத்த சம்மேளனம் உள்பட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகாா் அளிக்க குழு அமைக்காத புகாா் குறித்து பதிலளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை

DIN

இந்திய மல்யுத்த சம்மேளனம் உள்பட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகாா் அளிக்க குழு அமைக்காத புகாா் குறித்து பதிலளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த நட்சத்திர வீராங்கனைகள் பாலியல் புகாா் சுமத்தி, நடவடிக்கை எடுக்கக் கோரி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனம் உள்பட 15 தேசிய விளையாட்டு சம்மேளனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள் புகாா் குழு அமைக்கப்படவில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. இதை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்க இந்திய விளையாட்டு ஆணையம், பிசிசிஐ, இந்திய மல்யுத்த சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதில், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகாா் அளிக்க உள் புகாா் குழு அமைக்கப்படவில்லையா அல்லது அந்தக்குழு சரிவர செயல்படவில்லையா என பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT