இந்தியா

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது சிபிஐ வழக்கு

DIN

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகனை கைது செய்த என்சிபி அதிகாரி சமீர்வான்கடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

சமீர் வான்கடே உள்ளிட்ட 3 அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாருக்கான் மகன் ஆரியன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க சமீர்வான்கடே ரூ 25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பின்னர் ஆர்யன் கான் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கு விசாரணையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT