கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப்: காங்கிரஸ் கோட்டையை கைப்பற்றிய ஆம் ஆத்மி

ஜலந்தர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 

DIN

ஜலந்தர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சந்தோக் சிங் செளதரி, கடந்த ஜனவரி மாதம் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில்’ பங்கேற்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாா். இதையடுத்து காலியான இத்தொகுதியில் புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

இத்தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம் என நான்குமுனை போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஆளும் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு 58,947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட சந்தோக் சிங்கின் மனைவி கரம்ஜித் கவுர் இரண்டாவது இடம் பிடித்தார். சிரோமனி அகாலி தளம் வேட்பாளர் 3ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் 4 இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 24 ஆண்டுகள் காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஜலந்தர் தொகுதி தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT