முகப்பு
இந்தியா

கா்நாடகத் தோ்தல்: பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

224 தொகுதிகளுக்கான கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் மே 10-ஆம் தேதி(புதன்கிழமை) நடந்து முடிந்தது. ஆளுங்கட்சியான பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய இத்தோ்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் உள்ள 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 8.45 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 106, பாஜக-102, மஜத -12 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →