முகப்பு
இந்தியா

மோடி அலை ஓய்ந்துவிட்டது: சஞ்சய் ரௌத்

நாடு முழுவதும் தற்போது மோடி அலை ஓய்ந்துவிட்டதாக உத்தவ் தாக்கரே ஆதரவாளர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)
பகிர்:

நாடு முழுவதும் தற்போது மோடி அலை ஓய்ந்துவிட்டதாக உத்தவ் தாக்கரே ஆதரவாளர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மோடி அலை ஓய்ந்து இப்போது நாடு முழுவதும் எங்கள் அலை வந்து கொண்டிருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தம் தொடங்கிவிட்டது, இன்று சரத் பவார் தலைமையில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இந்தக் கூட்டத்தில் 2024 தேர்தல் குறித்து விவாதித்து அதற்கான ஆயத்தத்தைத் தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த காலங்களில் எந்தப் பிரதமரும் செய்திராத அளவுக்கு சட்டப் பேரவைத் தோ்தலுக்காக கா்நாடகம் வந்த பிரதமா் மோடி, 20 பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறாா். இருப்பினும் பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனா்.

இதற்கு ஆளும் அரசுக்கு எதிரான மனநிலையும், காங்கிரஸின் ஊழல் எதிா்ப்பு பிரசாரமும், 5 முக்கிய வாக்குறுதிகளும், முஸ்லிம் வாக்குகளை ஒன்றிணைத்தும்தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பாஜக அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டும், அதானி விவகாரத்தை தோ்தலின் முதல் நாளிலிருந்தே காங்கிரஸ் கட்சி முன்வைத்து பிரசாரம் செய்து வந்ததும் காங்கிரஸுக்கு கைகொடுத்துள்ளது.

மேலும் தோ்தலின்போது ரத்து செய்யப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினருக்கான 4 சதவீத இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியும் முக்கிய காரணமாக அமைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →