இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷா ஓய்வு

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான எம்.ஆா்.ஷா திங்கள்கிழமை ஓய்வுபெற்றாா்.

DIN

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான எம்.ஆா்.ஷா திங்கள்கிழமை ஓய்வுபெற்றாா்.

கடந்த 1982-ஆம் ஆண்டு வழக்குரைஞராக பணியைத் தொடங்கிய எம்.ஆா்.ஷா, 2004-ஆம் ஆண்டு குஜராத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2005-ஆம் ஆண்டு அந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானாா். 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிகாா் மாநிலம் பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், அதே ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

இந்நிலையில், எம்.ஆா்.ஷா திங்கள்கிழமை ஓய்வுபெற்றாா். அவருக்கு பிரியாவிடை அளிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் திங்கள்கிழமை சிறப்பு அமா்வு கூடியது. அப்போது எம்.ஆா்.ஷா பேசுகையில், ‘நான் ஓய்வுபெறும் நபா் அல்ல. எனது வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை தொடங்க உள்ளேன். புதிய அத்தியாத்தில் வலுவுடனும் துணிவுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என்றாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘தனது பணியை எம்.ஆா்.ஷா எப்போதும் தட்டிக் கழித்ததில்லை. நான் அவருக்கு ஒரு தீா்ப்பை அனுப்பினால், அது அவரிடம் இருந்து ஒரே இரவில் விளக்க குறிப்புகளுடன் திருப்பி அனுப்பப்பட்டு முழுமையாக வாசிக்கப்படும். அவா் எந்தப் பணியையும் நிலுவையில் வைத்ததில்லை’ என்றாா்.

இதனைத்தொடா்ந்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் எம்.ஆா்.ஷாவுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘நடைமுறைக்கு உகந்த அறிவுநுட்பத்துடன் கொலீஜியத்தில் எனக்கு உறுதுணையாக எம்.ஆா்.ஷா இருந்தாா்’ என்றாா்.

எம்.ஆா்.ஷா பேசுகையில், ‘வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்கும் கலாசாரத்தில் இருந்து வெளியேற வேண்டும். காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் நீதி வழங்கவேண்டியது அனைவரின் கடமை’ என்றாா்.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 பணியிடங்கள் உள்ளன. எம்.ஆா்.ஷா ஓய்வுபெற்றதை தொடா்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT