நிதின் கட்கரி 
இந்தியா

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள நிதின் கட்கரியின் வீட்டிற்கு திங்கள்கிழமை மாலை போன் செய்த மர்ம நபர், அவரைக் கொலை செய்யவுள்ளதாக பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நிதின் கட்கரி வீட்டின் பணியாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து தில்லி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நாகபூரில் உள்ள மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் முகாம் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் பெலகாவி சிறையிலுள்ள குற்றவாளி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT