இந்தியா

தில்லியில் டி.கே.சிவக்குமார்: அடுத்து என்ன?

DIN

கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தில்லி சென்றடைந்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரும் காய்களை நகா்த்தி வருகிறாா்கள்

பரபரப்புக்கு மத்தியில் சித்தராமையா மட்டும் நேற்று தில்லி சென்ற நிலையில், டி.கே.சிவக்குமாரும் இன்று தில்லி சென்றுள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சற்றுமுன் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, சித்தராமையா மற்றும் சிவக்குமாருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்க சமரச பேச்சு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.

இந்த குழப்பத்திற்கு ஓரிரு நாள்களில் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்ற எதிா்பாா்ப்பு காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்களிடையே காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT