தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.
கா்நாடக பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. இதையடுத்து, மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே போட்டி நிலவி வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைமை கடந்த ஓரிரு தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
அந்தவகையில் கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்திற்கு சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் சென்றுள்ளனர். இருவரும் ஒரே காரில் சென்றுள்ளது சுமூக முடிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விரைவில் கர்நாடக முதல்வர் பதவி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.