ஜெய்ப்பூர்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள போஜ்புரா கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் அக்ஷித் இன்று காலை 7 மணியளவில் எதிர்பாராத வகையில் விழந்துள்ளான்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அக்ஷித்தை இரும்பு வலையின் உதவியுடன் வெளியே எடுத்தனர்.
பின்னர் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனின் உடல்நிலை ஆபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் போஜ்புரா கிராமத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.