இந்தியா

ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: காங்கிரஸ் விமரிசனம்

பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. இது 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது.

DIN

புதுதில்லி:  பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. இது 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம்.  ஆனால் அது தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் ஆா்பிஐ தெரிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் விமரிசித்து வருகின்றன. 

இந்நிலையில், பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன. இது 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் தற்போது திரும்பப் பெறப்படுகின்றன. 

இது, தன்னைத்தானே 'விஸ்வகுரு' என்று சொல்லிக்கொள்பவரின் வழக்கமான பாணி. 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்: காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாஜக அரசின் ''2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்'' என்று விமரிசித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக, பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது: ஆர் பி உதயகுமார்

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

SCROLL FOR NEXT